ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா தோல்வி

ஜூனியர் உலக கோப்பை ஆக்கியின் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா தோல்வி
Published on

புவனேஸ்வர்,

12-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்தது. இதில் வெண்கலப்பதக்கத்தை நிர்ணயிக்கும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பிரான்சுடன் மல்லுகட்டியது.

இந்தியா பிரான்சை வீழ்த்தி விண்கலம் வெல்லும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியா 1-3 என்ற கோல் கணக்கில் தோற்று ஏமாற்றம் அளித்ததுடன், 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பிரான்ஸ் கேப்டன் டிமோத்தீ கிளைமென்ட் ஹாட்ரிக் கோல் அடித்தார். இந்திய தரப்பில் சுதீப் சிர்மாகோ 42-வது நிமிடத்தில் ஆறுதல் கோல் அடித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com