ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஆக்கி: அரையிறுதியில் இந்தியா - ஜெர்மனி அணிகள் இன்று மோதல்!

இன்று நடைபெற உள்ள மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
image courtesy; twitter/@TheHockeyIndia
image courtesy; twitter/@TheHockeyIndia
Published on

கோலாலம்பூர்,

13-வது ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஆக்கி தொடர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றிருந்தன. அவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தன.

லீக் சுற்றின் முடிவில் இந்தியா, ஸ்பெயின், அர்ஜென்டினா, ஜெர்மனி, பிரான்ஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

காலிறுதியில் இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இதில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோத உள்ளன.

இன்று நடைபெற உள்ள மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com