ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி : ஜெர்மனி அரையிறுதிக்கு முன்னேற்றம்

காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது.
சென்னை,
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் நாக் அவுட்டான காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி, பிரான்ஸ் அணிகள் மோதின . பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் ஆதிக்கம் செலுத்தினர்.
இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.இதையடுத்து, ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





