ஜுனியர் ஆக்கி உலகக்கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார் கனிமொழி எம்.பி.,

உலகக்கோப்பையை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தும் நோக்கில் வாகனப் பேரணி தற்போது நடைபெற்று வருகிறது.
ஜுனியர் ஆக்கி உலகக்கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார் கனிமொழி எம்.பி.,
Published on

கோவில்பட்டி

இந்தியா, அர்ஜென்டினா, சீனா, நியூசிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட 24 நாடுகள் கலந்து கொள்ளும் ஜூனியர் ஆக்கி உலகக்கோப்பைப் போட்டிகள் நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சர்வதேச ஆக்கி சம்மேளனம் இணைந்து நடைபெற உள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கான உலகக்கோப்பையை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தும் நோக்கில் வாகனப் பேரணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (13/11/2025) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, 14-ஆவது ஆடவர் ஜுனியர் ஆக்கி உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி S.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகரமன்ற தலைவர் கா.கருணாநிதி, ஹாக்கி வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com