தேசிய சப்-ஜூனியர் ஆக்கி: கேரளா அணி வெற்றி

ஜார்கண்ட் அணி 5-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை பதம் பார்த்தது.
சென்னை,
தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் 15-வது தேசிய சப்-ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோர்) ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 29 மாநில அணிகள் 'ஏ', 'பி', 'சி' என 3 டிவிசனாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இதில் நேற்று நடந்த 'ஏ' டிவிசன் ஆட்டம் ஒன்றில் உத்தரபிரதேச அணி 5-4 என்ற கோல் கணக்கில் மத்தியபிரதேசத்தை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் ஒடிசா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சண்டிகாரை சாய்த்தது. இன்னொரு ஆட்டத்தில் ஜார்கண்ட் அணி 5-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை பதம் பார்த்தது.
'பி' டிவிசன் ஆட்டம் ஒன்றில் பெங்கால் அணி 4-1 என்ற கோல் கணக்கில் குஜராத்தை துவம்சம் செய்தது. மற்றொரு ஆட்டத்தில் கேரளா அணி 5-1 என்ற கோல் கணக்கில் தெலுங்கானாவை தோற்கடித்தது. இன்னொரு ஆட்டத்தில் இமாச்சலபிரதேச அணி 9-3 என்ற கோல் கணக்கில் ஆந்திராவை பந்தாடியது.






