சொந்த மண்ணில் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது அணிக்கு ஒரு "மிகச்சிறந்த அனுபவமாக" இருக்கும்- இந்திய மகளிர் ஆக்கி கேப்டன் சவிதா

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடர் இந்திய மண்ணில் நடைபெற உள்ளது.
image courtesy; hockey india
image courtesy; hockey india
Published on

ராஞ்சி,

மகளிருக்கான ஆசிய கோப்பை ஆக்கி தொடர் இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ளது. இதில் ஆசியாவின் ஆறு சிறந்த அணிகளான இந்தியா, நடப்பு சாம்பியன் ஜப்பான், சீனா, கொரியா , மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடர் குறித்து இந்திய கேப்டன் சவிதா கூறுகையில், ஜார்கண்டில் சொந்த மண்ணில் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது அணிக்கு ஒரு மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும். ஏனெனில் ரசிகர்களின் ஆதரவு மற்றும் உற்சாகம் ஆகியவை எங்களை நன்றாக விளையாட தூண்டும். மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி ராஞ்சியில் நடைபெற உள்ளதை அறிந்து வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அறிவிப்பு, பெண்கள் ஆக்கி அணி முன்னேற்றத்திற்கும் அங்கீகாரத்திற்கும் சான்றாகும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், இந்தியாவில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடத்தப்படும் என்ற அறிவிப்பு, நாட்டில் பெண்கள் ஆக்கியின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயத்தைக் குறிக்கிறது. இந்தப் போட்டி வெறும் போட்டி மட்டுமல்ல; இது பெண்கள் ஆக்கி எடுத்த முன்னேற்றங்களின் கொண்டாட்டம். இது ஒற்றுமை, விளையாட்டுத்திறன் மற்றும் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, எங்கள் அடையாளத்தை மேம்படுத்த நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதற்காக கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறோம். எங்கள் சொந்த ரசிகர்களின் முன்னால் எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவும்,  இரண்டாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை வென்று தேசத்தை பெருமைப்படுத்தவும் ஒவ்வொரு அம்சத்திலும் கவனம் செலுத்துகிறோம். " என்றார்.

இதுவரை இந்திய மகளிர் அணி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 2016ஆம் ஆண்டு பட்டத்தையும், 2018 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com