மகளிர் ஆசிய கோப்பையை வென்ற இந்திய ஆக்கி அணிக்கு பரிசுத்தொகைகள் அறிவிப்பு

8-வது மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
image courtesy: twitter/@TheHockeyIndia
image courtesy: twitter/@TheHockeyIndia
Published on

ராஜ்கிர்,

6 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது.

இதில் 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.

இந்நிலையில் இந்திய ஆக்கி கூட்டமைப்பு பட்டம் வென்ற இந்திய அணியினருக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சமும், பயிற்சியாளர் உள்பட அணியின் உதவியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது.

மேலும் பீகார் அரசும் இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது. வீராங்கனைகளுக்கு தலா ரூ. 10 லட்சமும், தலைமை பயிற்சியாளருக்கு ரூ.10 லட்சம் மற்றும் உதவியாளர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com