இந்திய ஆக்கியின் சிறந்த வீரர், வீராங்கனை விருதுக்கு ஸ்ரீஜேஷ், சவிதா உள்ளிட்டோர் பரிந்துரை

இந்தியா ஆக்கி கூட்டமைப்பு சார்பில் (எச்.ஐ.,) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
image courtesy: twitter/ @TheHockeyIndia
image courtesy: twitter/ @TheHockeyIndia
Published on

புதுடெல்லி,

இந்தியா ஆக்கி கூட்டமைப்பு சார்பில் (எச்.ஐ.,) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதில் 2023-ம் ஆண்டிற்கான விருதுக்கு மொத்தம் 8 பிரிவுகளில் 32 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். சிறந்த வீரர், வீராங்கனைக்கு ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும். சிறந்த கோல் கீப்பருக்கு ரூ. 5 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் ரூ. 7.56 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

இதன்படி சிறந்த கோல்கீப்பர் விருதிற்கான பரிந்துரை பட்டியலில் ஸ்ரீஜேஷ், இந்திய பெண்கள் அணி கேப்டன் சவிதா புனியா, மோஹித், கிருஷ்ணன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். சிறந்த வீரர் பரிந்துரை பட்டியலில் ஸ்ரீஜேஷ், அபிஷேக், ஹர்திக் சிங், இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

சவிதா புனியா, சலிமா, வந்தனா, நவ்னீத் கவுர் என நான்கு பேர், சிறந்த வீராங்கனை தேர்வு பட்டியலில் உள்ளனர். தவிர சிறந்த மத்திய கள வீரர், முன்கள வீரர் பிரிவிலும், மார்ச் 31ல் விருது வழங்கப்பட உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com