சூப்பர் டிவிசன் ஆக்கி: ஏ.ஜி.அலுவலக அணி வெற்றி..!

நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஏ.ஜி.அலுவலக அணி 6-1 என்ற கோல் கணக்கில் இந்திரா காந்தி கிளப்பை எளிதில் தோற்கடித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை மாவட்ட சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஏ.ஜி.அலுவலக அணி 6-1 என்ற கோல் கணக்கில் இந்திரா காந்தி கிளப்பை எளிதில் தோற்கடித்து 3-வது வெற்றியை பெற்றது. வருமான வரி-தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.) அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இன்றைய ஆட்டங்களில் தெற்கு ரெயில்வே-இந்திய உணவு கழகம் (பிற்பகல் 2 மணி), ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரி-ஏ.ஜி.அலுவலகம் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com