சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் வங்கி அணி கோல் மழை

சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், இந்தியன் வங்கி அணி கோல் மழை பொழிந்தது.
சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் வங்கி அணி கோல் மழை
Published on

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி-இந்திரா காந்தி கிளப் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியன் வங்கி அணி கோல் மழை பொழிந்தது. முடிவில் இந்தியன் வங்கி அணி 11-1 என்ற கோல் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றது.

இந்தியன் வங்கி அணியில் ஸ்ரீகாந்த் 4 கோலும், வினோதன் 2 கோலும், மதன், ராஜா, ஸ்டாலின் அபிலாஷ், மணிகண்டன், திராஸ் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்திரா காந்தி கிளப் தரப்பில் சுரேந்தர் ஒரு பதில் கோல் திருப்பினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய உணவு கழக அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஏ.பி.எம்.இன்போடெக் அணியை தோற்கடித்தது. இந்திய உணவு கழக அணியில் ஜீவன்குமார் 2 கோலும், ஹரிகரன், ரஞ்சித் தலா ஒரு கோலும் அடித்தனர்.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி-ஏ.ஜி.அலுவலகம் (பிற்பகல் 2.30 மணி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-தமிழ்நாடு போலீஸ் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com