சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி

சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றிபெற்றது.
சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி
Published on


சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு போலீஸ்-சென்னை துறைமுக கழக அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் சென்னை துறைமுக கழக அணியை வீழ்த்தியது. தமிழ்நாடு போலீஸ் அணியில் திருஞானவேலன் 2 கோலும், கண்ணன், ரகு தலா ஒரு கோலும், சென்னை துறைமுக கழக அணியில் யுவராஜ் 2 கோலும், பரமேஸ்வரன் ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் ஐ.சி.எப்.-வருமான வரி அணிகள் சந்தித்தன. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஐ.சி.எப். அணியில் சுராஜ் மின்ஸ் 2 கோலும், பிருத்வி ஒரு கோலும், வருமான வரி அணியில் மகேந்திரன் 3 கோலும் அடித்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்தியன் வங்கி-இந்திரா காந்தி கிளப் (பிற்பகல் 2.30 மணி), ஏ.பி.எம்.இன்போடெக்-இந்திய உணவு கழகம் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com