சூப்பர் டிவிசன் ஆக்கி: போலீஸ் அணி வெற்றி

சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் நடந்து வருகிறது.
சூப்பர் டிவிசன் ஆக்கி: போலீஸ் அணி வெற்றி
Published on

சென்னை,

சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில், ஸ்ரீராம் சிட்டி நிறுவனம் ஆதரவுடன் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஐ.ஓ.பி. அணி 6-3 என்ற கோல் கணக்கில் சென்னை துறைமுகத்தை தோற்கடித்து தொடர்ச்சியாக 6-வது வெற்றியை ருசித்தது. மற்றொரு ஆட்டத்தில் சென்னை மாநகர போலீஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய விளையாட்டு ஆணையைத்தை (சாய்) வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஏ.ஜி.அலுவலகம்-இந்திரா காந்தி கிளப் (பிற்பகல் 2 மணி), வருமான வரி-எஸ்.டி.ஏ.டி. (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com