சூப்பர் டிவிசன் ஆக்கி: கோல்மழை பொழிந்த எஸ்.டி.ஏ.டி. அணி..!

நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் கோல்மழை பொழிந்த எஸ்.டி.ஏ.டி. அணி 10-0 என்ற கோல் கணக்கில் சாய் அணியை வீழ்த்தியது.
சூப்பர் டிவிசன் ஆக்கி: கோல்மழை பொழிந்த எஸ்.டி.ஏ.டி. அணி..!
Published on

சென்னை,

சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில், ஸ்ரீராம் சிட்டி நிறுவனம் ஆதரவுடன் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் கோல்மழை பொழிந்த எஸ்.டி.ஏ.டி. அணி 10-0 என்ற கோல் கணக்கில் சாய் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் ஐ.சி.எப். 2-1 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வேயை வீழ்த்தியது.

இன்றைய ஆட்டங்களில் வருமான வரி - இந்திய உணவு கழகம் (பிற்பகல் 2 மணி), இந்தியன் வங்கி - இந்திரா காந்தி கிளப் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com