சூப்பர் டிவிசன் ஆக்கி: தெற்கு ரெயில்வெ அணி வெற்றி

சென்னை ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
சூப்பர் டிவிசன் ஆக்கி: தெற்கு ரெயில்வெ அணி வெற்றி
Published on

சென்னை,

நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தெற்கு ரெயில்வே-வருமான வரி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே அணி 2-1 என்ற கோல் கணக்கில் வருமான வரி அணியை வீழ்த்தியது. தெற்கு ரெயில்வே அணியில் வர்மா, கவுதமன் தலா ஒரு கோல் அடித்தனர்.

வருமான வரி அணியில் அருண்குமார் ஒரு கோல் திருப்பினார். மற்றொரு ஆட்டம் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் இந்திய உணவு கழகம்-தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (பிற்பகல் 2.30 மணி), ஐ.சி.எப்.-இந்திய விளையாட்டு ஆணையம் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com