‘சூப்பர் சிக்ஸ்’ ஹாக்கி லீக்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி ‘சாம்பியன்’

சூப்பர் சிக்ஸ் ஆக்கி லீக் போட்டியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
‘சூப்பர் சிக்ஸ்’ ஹாக்கி லீக்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி ‘சாம்பியன்’
Published on

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி ஆதரவுடன் சூப்பர் சிக்ஸ் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தரப்பில் செந்தில் கிருஷ்ணன் 25-வது நிமிடத்திலும், சாய் அணி தரப்பில் சண்முகவேல் 56-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இந்த போட்டி தொடரில் 4 வெற்றி, ஒரு டிராவுடன் 13 புள்ளிகள் குவித்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சாய் அணி 2 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது. சாம்பியன் பட்டம் வென்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிக்கு ரூ.80 ஆயிரமும், 2-வது இடம் பிடித்த சாய் அணிக்கு ரூ.60 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிக்கு ஸ்ரீராம் சிட்டி செயல் இயக்குனர் பி.அன்பு செல்வம் பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழாவில் வக்கீல் ஆர்.நீலகண்டன், சென்னை ஆக்கி சங்க தலைவர் வி.பாஸ்கரன், செயலாளர் எம்.எஸ்.உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com