

ஆம்ஸ்டர்டாம்,
இரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் 2-வது மற்றும் கடைசி ஆட்டம் ஆம்ஸ்டர்டாமில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது. இந்திய அணியில் குர்ஜந்த்சிங் 4-வது நிமிடத்திலும், மன்தீப்சிங் 51-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.