உலக கோப்பை ஹாக்கி தொடரின் இன்றைய ஆட்டங்கள்..!

உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.
Image Courtesy: @TheHockeyIndia
Image Courtesy: @TheHockeyIndia
Published on

புவனேஸ்வர்,

15-வது உலகக் கோப்பை ஆக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடக்கிறது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. '

ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், 'சி' பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, 'டி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறும். 2 மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் மோதி அதில் இருந்து மேலும் 4 அணிகள் கால்இறுதிக்கு தேர்வாகும்.

இந்திய அணி 2 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 1 டிரா என கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் தனது பிரிவில் 2வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், ஹாக்கி தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

அதன்படி இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொரியா-ஜப்பான் அணிகளும், இரவு 7 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஜெர்மனி-பெல்ஜியம் அணிகளும் மோத உள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com