

டோக்கியோ,
32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 11வது நாளான இன்று நடந்த மகளிர் ஆக்கி போட்டி காலிறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின.
இதில், இந்திய மகளிர் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. குர்ஜித் கவுர் கோல் அடித்து, இந்தியாவின் வெற்றிக்கு உதவியுள்ளார்.