

லண்டன்,
16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டிகள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அயர்லாந்து அணி, ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது.
பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் அயர்லாந்தின் ஓபிலானகன் முதல் கேலை அடித்தார். பின்னர் ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் ஸ்பெயினின் மகாஸ், ஒரு கேல் அடித்து அசத்தினார். இதைத் தெடர்ந்து, மேலும் கேல் அடிக்க இரு அணியினரும் எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போனது. இதன்மூலம் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் இருந்தது.
இதனால் பேட்டியின் முடிவு பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு மாற்றப்பட்டது. இதில் அபாரமாக ஆடிய அயர்லாந்து அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அயர்லாந்து அணி உலக கேப்பை வரலாற்றில் முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்து சாதனை படைத்தது. இதற்கு முன் அயர்லாந்து அணி 1994ம் ஆண்டு 11வது இடம் பிடித்திருந்ததே சிறந்த செயல்பாடாக இருந்தது.
மற்றெரு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் நெதர்லாந்து அணி, ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. இதில் நெதர்லாந்து அணியின் சார்பில் கெல்லி ஜான்கர் 1 கோலும், ஆஸ்திரேலியா அணியின் சார்பில் ஜார்ஜினா மார்கன் 1 கேலும் அடித்தனர். இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலை வகித்தது. பின்னர் நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட் முறையில், நெதர்லாந்து அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 12வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது.
இதன்மூலம் அடுத்து நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் நெதர்லாந்து, அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.