இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி தொடரில் இடம்பெற்ற அதிக எடை கொண்ட வீரர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிக எடை கொண்ட ஒரு வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.
Published on

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தானது. இதனைதொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் புதிதாக ஒரு வீரர் சேர்க்கப்பட்டுள்ளார். இவரின் பெயர் ரஹீம் கார்ன்வால், மேலும் இவரது உயரம் 6.6 அடி மற்றும் இவரது எடை 140 கிலோ ஆகும். கார்ன்வால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் பட்சத்தில் கிரிக்கெட் வரலாற்றில் அதிக எடையுடன் விளையாடிய வீரர் என்ற வினேதமான சாதனையை படைப்பார்.

கார்ன்வால் 55 முதல் தர போட்டிகளில் விளையாடி 2,224 ரன்களும், 260 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்வதேச தரவரிசையில் முதலிடத்திலுள்ள இந்திய அணிக்கு எதிராக இம்முறை விளையாடுவது சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com