2028 ஒலிம்பிக்கில் இந்தியா முதல் 10 இடத்தைப் பிடிக்கும்: விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ

2028 ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய அணி முதல் 10 இடத்தைப் பிடிக்கும் என்று விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
Published on

புதுடெல்லி,

2028 ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய அணி அதிகப் பதக்கங்களை வென்று முதல் 10 இடத்தைப் பிடிக்கும் என்று விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டகிராமில் பேசிய அவர், 2024 ஒலிம்பிக்ஸ் போட்டிக்கும் பெரிய இலக்கு உள்ளது. ஆனால், 2028 ஒலிம்பிக்ஸ் போட்டியில் அதிக பதக்கங்களை வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளோம். நான் விளையாட்டுத்துறை மந்திரியானபோது குறைவான திறமைகளே நம்மிடம் இருந்தன. 2024-ல் நம்மிடம் அதிக ஒலிம்பிக்ஸ் பதக்கங்களை வெல்லும் அணி இருக்கும். 2028-ல் முதல் 10 இடங்களைப் பிடிக்கவேண்டும் என்று குறிக்கோள் வைத்துள்ளோம். அதற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. இளம் வீரர்கள் தான் நம்முடைய வருங்கால சாம்பியன்கள். இதற்கான பலனை 2024- ஆண்டிலேயே தெரிந்துகொள்வோம். ஆனால் குறித்துவைத்துக் கொள்ளுங்கள். 2028 ஒலிம்பிக்ஸ் போட்டியில் முதல் பத்து இடங்களில் நாம் இருப்போம் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com