சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக பத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது-இந்திய ஒலிம்பிக் சங்க மூத்த அதிகாரி

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) தலைவராக நரேந்தர் பத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது "சட்டவிரோதமானது" என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Published on

புதுடெல்லி

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) தலைவராக நரேந்தர் பத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது "சட்டவிரோதமானது" என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் கடுமையான உள் மோதல் அதிகரித்துள்ள நிலையில், துணைத் தலைவர் சுதான்ஷு மிட்டல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி) தலைவர் தாமஸ் பாக் மற்றும் ஆளும் நிர்வாக சபை பத்ராவுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொண்டனர்.

நிர்வாக சபை மற்றும் பிற ஐ.ஓ.சி உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் மிட்டல் நவம்பர் 2016 இல் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது பத்ரா தொடர்ந்து ஹாக்கி இந்தியாவின் தலைவராக இருந்தார் என கூறி உள்ளார்.

ஆனால், டிசம்பர் 2017 இல் தேர்தல் நடைபெறுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர், அந்த பதவியை அவர் கைவிட்ட போதிலும், 63 வயதான அவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக நின்றபோது ஹாக்கி இந்தியாவின் பிரதிநிதியாக இருந்தார் என்றும் மிட்டல் குற்றம் சாட்டுகிறார்.

தனது இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பிரசிடென்சி காரணமாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரான பத்ரா, சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஹாக்கி இந்தியா தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்திய ஊடகங்களில் வந்த தகவல்களின்படி, பாத்ரா தனது ஹாக்கி இந்தியா பதவியில் இருந்து ராஜினாமா செய்ததை ஜூலை 2017 இல் ஒப்புக் கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com