சஞ்சு சாம்சனுக்கு இர்பான் பதான் ஆதரவு குரல்

சஞ்சு சாம்சனுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சனுக்கு இர்பான் பதான் ஆதரவு குரல்
Published on

திருவனந்தபுரம்,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இவருக்கு அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனக்குரல் எழுந்தன.

Also Read
டி20 உலகக் கோப்பையில் இடம்.. சஞ்சு சாம்சன் பதிவு வைரல்
சஞ்சு சாம்சனுக்கு இர்பான் பதான் ஆதரவு குரல்

இதையடுத்து, நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகளிலும் அவருக்கு தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் அனைத்து போட்டிகளிலும் சோபிக்கவில்லை. ஒரு போட்டியில் கூட 50 ரன்கள் எடுக்கவில்லை. இன்று நடைபெற்ற போட்டியிலும் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் அவரது பார்ம் குறித்து ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்க வேண்டுமென இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்து இருப்பதாவது; “சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங் வரிசையில் நிலையான இடம் கொடுக்க வேண்டும். மிடில் ஆர்டருக்கு தள்ளப்பட்டது நியாயமற்றது. அவர் தன்னுடைய பார்மை மீட்டெடுக்க அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com