

டென்னிஸ் உலகில் தற்போது கோலோச்சும் வீரர் என்றால் அது சந்தேகமே இல்லாமல் ஜோகோவிச் என்று கூறிவிடலாம். உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான ஜோகோவிச் செர்பியாவை சேர்ந்தவர். டென்னிசில் அசாத்திய திறனை கொண்டுள்ள ஜோகோவிச் உலகின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்களான பெடரர், நடாலுக்கு கடும் சவாலாக விளங்குபவர்.
டென்னிஸ் உலகில் முதல் நிலையை எட்டியுள்ள போதிலும் நடால், பெடரர் அளவுக்கு ரசிகர்களின் ஆதரவை ஜோகாவிச்சால் பெற முடியவில்லை என்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரும் முன்னாள் டென்னிஸ் வீரருமான மார்க் ரோசட் தெரிவித்துள்ளார். ஜோகோவிச் விளையாடும் சமயத்தில் மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் பாதிக்கும் மேலானோர் அவரை எதிர்த்து விளையாடுபவர்களுக்கு தான் ஆதரவாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.