ஐ.ஓ.சி.யில் இணைந்தார், ஹிமாதாஸ்

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமாதாஸ், ஐ.ஓ.சி.யில் இணைந்தார்.
Published on

கவுகாத்தி,

உலக ஜூனியர் தடகள போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ், ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு தங்கமும், 2 வெள்ளியும் வசப்படுத்தினார். அசாம் மாநிலத்தை சேர்ந்த 18 வயதான ஹிமா தாசுக்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் (ஐ.ஓ.சி.) நிறுவனம் அதிகாரி அந்தஸ்தில் வேலை வாய்ப்பு வழங்கி கவுரவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக ஹிமா தாசை இணைத்துக் கொள்வதில் பெருமை அடைகிறோம். வருங்காலத்தில் அவர் மேலும் பல வெற்றிகளை குவிக்கும் போது எங்களது நிறுவனத்தின் மதிப்பும் உயரும். அதிகாரி அந்தஸ்துக்குரிய ஊதியம் மற்றும் இதர சலுகைகள் அனைத்தும் அவருக்கு வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com