மெக்சிகோ சர்வதேச டென்னிஸ்: ரபெல் நடால் ‘சாம்பியன்’

மெக்சிகோ சர்வதேச டென்னிஸ் போட்டியில், ரபெல் நடால் ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.
Published on

அகபுல்கோ,

அகபுல்கோ சர்வதேச டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் டெய்லர் பிரைட்சை (அமெரிக்கா) வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார். இங்கு அவர் பட்டம் வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2005, 2013-ம் ஆண்டுகளில் பட்டம் வென்று இருக்கிறார்.

பின்னர் 33 வயதான நடால் கூறுகையில், எனது வாழ்க்கையில் முதல் மிகப்பெரிய பட்டத்தை இங்கு தான் வென்றேன். 15 ஆண்டுகளுக்கு பிறகும் மகுடம் சூடியது வியப்பளிக்கிறது. சொந்த ஊரில் விளையாடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இங்குள்ள ரசிகர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என்றார். பட்டம் வென்ற நடாலுக்கு ரூ.2 கோடியும், 2-வது இடம் பெற்ற பிரைட்சுக்கு ரூ.1 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com