கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் ராஜினாமா

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து மைக் ஹெஸ்சன்விலகியுள்ளார்.
Published on

நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் மைக் ஹெஸ்சன். இவர் ஐபிஎல் தொடரில் விளையாடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.இந்நிலையில் தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் கூறுகையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் ஒரு வருடமாக சந்தோசமாக வேலைப்பார்த்தேன். அவர்கள் என்னை தலைமை பயிற்சியாளராக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வருடம் அணியை சிறப்பான நிலைக்கு கொண்டு போக முடியவில்லை என்பது ஏமாற்றமே. பஞ்சாப் அணி கோப்பையை வெல்வது மிகத் தொலைவில் இல்லை. வருங்காலத்தில் சிறப்பாக விளையாட வாழ்த்துகிறேன் என்றார்.

மைக் ஹெஸ்ன் இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார், ஆனால் 2019ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆறாவது இடத்தைப் பிடித்த பிறகு இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

@lionsdenkxippic.twitter.com/xOGfEw4LBq — Mike Hesson (@CoachHesson) August 7, 2019 ""twitter-tweet"">

A message from me regarding @lionsdenkxippic.twitter.com/xOGfEw4LBq

— Mike Hesson (@CoachHesson) August 7, 2019 " alt="">

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com