ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக முஷ்டாக் அகமது தேர்வு

ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக முஷ்டாக் அகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக முஷ்டாக் அகமது தேர்வு
Published on

புதுடெல்லி,

ஆக்கி இந்தியா அமைப்பின் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு டெல்லியில் நேற்று நடந்தது. இதில் ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக பீகாரைச் சேர்ந்த முகமது முஷ்டாக் அகமது போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளராக ரஜிந்தர்சிங்கும், சீனியர் துணைத்தலைவராக ஞானேந்திர நிங்கோம்பமும், பொருளாளராக தபன் குமார் தாசும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழகத்தை சேர்ந்த ரேணுகா லட்சுமி நிர்வாக குழு உறுப்பினராக தேர்வானார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com