

சென்னை,
டிரியாக் ஓபன் டென்னிஸ் ருமேனியாவின் தலைநகர் புக்காரெஸ்டில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் என்.ஸ்ரீராம் பாலாஜி, ஆஸ்திரியாவைச் சேர்ந்த நீல் ஓபர்லெய்ட்னர் உடன் இணைந்து விளையாடி வருகிறார்.
முதல் சுற்றில் ஸ்ரீராம் பாலாஜி ஜோடி ருமேனியாவின் அலெக்சாண்டர் ஜேகன்- போஜ்டன் பவெல் ஜோடியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் 2-6 , 6-1, 1(12)-0(10) என்ற செட் கணக்கில் ஸ்ரீராம் பாலாஜி ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.