

நியூயார்க்,
சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரேலிய ஓபனை வென்ற கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) முதலிடத்திலும், ஜானிக் சினெர் (இத்தாலி) 2-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள். செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் இரு ஆட்டங்களில் அரினா சபலென்கா (பெலாரஸ்), இகா ஸ்வியாடெக் (போலந்து) நீடிக்கிறார்கள். ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 2 இடங்கள் முன்னேறி தனது சிறந்த நிலையாக 3-வது இடத்தை பிடித்துள்ளார்.