ஜூனியர் துப்பாக்கி சுடுதல் தொடக்க நாளிலேயே அசத்திய இந்திய வீரர்கள்...!

பல்வேறு நிகழ்வுகளின் கீழ் 12 இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
ஜூனியர் துப்பாக்கி சுடுதல் தொடக்க நாளிலேயே அசத்திய இந்திய வீரர்கள்...!
Published on

லிமா,பெரு.

2021 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க நாளான நேற்று ஆறு தனிநபர் நிகழ்வுகள் மற்றும் ஒலிம்பிக் துறைகளின் தகுதிச் சுற்றுகள் நடைபெற்றன.

இதில் பல்வேறு நிகழ்வுகளின் கீழ் 12 இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ருத்ராங்க்ஷ் பாட்டில், தனுஷ் ஸ்ரீகாந்த் மற்றும் பார்த் மகிஜா ஆகியோர் தகுதி சுற்றில் முறையே 630.2, 629.6 மற்றும் 629.2 மதிப்பெண்களுடன் ஜூனியர் ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

இவர்கள் ஒட்டுமொத்த இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பெற்று முதல் எட்டு இடங்களை பிடித்தனர். இதன் மூலம் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

இதேபோல் ஜூனியர் மகளிர் 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் மெஹுலி கோஷ் 630.9 புள்ளிகளும், ரமிதா 629.8 புள்ளிகளும் மற்றும் நிஷா கன்வார் 629.1 புள்ளிகளும் பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இதே போல் ஜூனியர் மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் நிகழ்வில் இந்தியாவின் ரிதம் சங்வான் 577 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும் ,மனு பாக்கர் 574 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும், ஈஷா சிங் 572 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த ஐந்தாவது இடத்தையும் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினர்

இதன் இறுதிப் போட்டிகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன. இறுதி சுற்று போட்டிகளில் இந்தியா குறைந்தது நான்கு தங்கப் பதக்கங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com