

மாட்ரிட்,
ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகளுக்கு 'லாரி யஸ்' உலக விளையாட்டு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்தது. கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் மற்றும் இந்த ஆண்டு தொடக்கத் தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பட்டங் களை வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரு மான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் சிறந்த வீரர் விருதையும், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை தொடர்ந்து 2-வது முறையாக கைப்பற் றிய 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) சிறந்த வீராங்கனை விருதையும் பெற்றனர்.
கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் முதல்மு றையாக சாம்பியன் பட்டத்தை வென்ற பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) சிறந்த அணி விருதை தட்டிச் சென்றது.