

பர்மிங்காம்,
பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சி (ஜப்பான்) 21-15, 21-15 என்ற நேர் செட்டில் அன் சேயங்கை (தென்கொரியா) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்கள் இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் திரீசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடியினர் 17-21, 16-21 என்ற நேர் செட்டில் ஜாங் ஷூ ஸியான்-ஜெங் யு (சீனா) இணையிடம் தோல்வி அடைந்தனர்.
இருப்பினும் நூற்றாண்டுகால பழமை வாய்ந்த இந்த போட்டியில் அரைஇறுதிக்கு வந்த முதல் இந்திய ஜோடி என்ற பெருமையுடன் தாயகம் திரும்புகிறார்கள்.