ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: நடப்பு சாம்பியனை வீழ்த்தி லக்சயா சென் அசத்தல்


ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: நடப்பு சாம்பியனை வீழ்த்தி லக்சயா சென் அசத்தல்
x

லக்‌சயா சென் (image courtesy: BAI Media via ANI)

நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்த்தில் இந்திய வீரர் லக்‌சயா சென், ஜோனதன் கிறிஸ்டியை சந்தித்தார்.

பர்மிங்காம்,

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் லக்சயா சென், நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவருமான ஜோனதன் கிறிஸ்டியை (இந்தோனேசியா) சந்தித்தார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லக்சயா சென் 21-13, 21-10 என்ற நேர்செட்டில் ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அவருக்கு இந்த வெற்றியை பெற 36 நிமிடமே தேவைப்பட்டது. கிறிஸ்டிக்கு எதிராக 7-வது முறையாக மோதிய லக்சயா சென் அதில் ருசித்த 3-வது வெற்றி இதுவாகும்.


Next Story