

சென்னை,
இதில் கடைசி நாளான நேற்று நடந்த லீக் ஆட்டங்கள் முடிவில் அண்ணாமலை பல்கலைக்கழக (தமிழ்நாடு) அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. குருசேத்ரா (அரியானா) அணி 2-வது இடத்தையும், மங்களூர் (கர்நாடகா) அணி 3-வது இடத்தையும், எம்.ஜி.அணி (கேரளா) 4-வது இடத்தையும் பெற்றன.
பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு நெட்பால் சங்க தலைவர் ராஜ் திருவேங்கடம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். இந்தியன் வங்கி சீனியர் மானேஜர் எஸ்.கல்யாணி, போட்டி அமைப்பு குழு செயலாளர் பி.ரஜினிகுமார் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.