உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள்: ஸ்டீபிள்சேஸில் இந்திய வீராங்கனை வெள்ளி வென்று அசத்தல்

image courtesy:instagram/ankita1500m
இந்த போட்டியில் பின்லாந்தின் இலோனா மரியா தங்கப்பதக்கம் வென்றார்.
எசென்,
உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. கடைசி நாளான இன்று மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டி நடைபெற்றது.
இதில் இந்திய வீராங்கனை அங்கிதா பந்தய தூரத்தை 9:31.99 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். ஜெர்மனியின் அடியா புட்டே 9:33.34 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார். இந்த போட்டியில் பின்லாந்தின் இலோனா மரியா 9:31.86 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
Related Tags :
Next Story






