அகில இந்திய கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் 2-வது இடம்

அகில இந்திய கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் 2-வது இடம் பிடித்தது.
அகில இந்திய கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் 2-வது இடம்
Published on

சென்னை,

அகில இந்திய பல்கலைக்கழக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடந்தது. 3 நாட்கள் நடந்த இந்த போட்டியில் பெண்கள் பிரிவில் பார்கத்துல்லா பகல்கலைக்கழக அணி (போபால்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அண்ணா பல்கலைக்கழக அணி (சென்னை) 2-வது இடத்தை பிடித்தது. ஆண்கள் பிரிவில் பாடலிபுத்ரா பல்கலைக்கழக அணி (பாட்னா) முதலிடத்தை பிடித்தது. ஜபுல்புர் பல்கலைக்கழக அணி (மத்தியபிரதேசம்) 2-வது இடம் பெற்றது. பரிசளிப்பு விழாவுக்கு சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வேந்தர் எஸ்.சுந்தர் மனோகரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com