உலகக் கோப்பை வில்வித்தை: தென்கொரியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

இறுதிப்போட்டியில் 2-ம் நிலை அணியான சீனாவுடன் மோதுகிறது.
உலகக் கோப்பை வில்வித்தை:
தென்கொரியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
Published on

ஷாங்காய்,

உலகக் கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 2) சீனாவின் ஷாங்காய் நக ரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ரிகர்வ் அணிகள் பிரிவின் அரையிறுதியில் இந்திய அணி, 10 முறை ஒலிம்பிக் சாம்பியனான தென்கொரி யாவை சந்தித்தது. இதில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கும்கும் மோஹோட் ஆகியோர் அடங்கிய இந்திய அணி அபாரமாக செயல்பட்டு 5-1 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னே றியது. இறுதிப்போட்டியில் 2-ம் நிலை அணியான சீனாவுடன் மோதுகிறது.

ஆண்களுக்கான ரிகர்வ் அணிகள் பிரிவின் 2-வது சுற்றில் நேரடியாக களம் கண்ட தருண்தீப் ராய், தீரஜ் பொம்மதேவரா. யாஷ்தீப் போகே ஆகி யோரை கொண்ட இந்திய அணி 2-6 என்ற கணக்கில் வங்காளதேசத்திடம் அதிர்ச்சிகரமாக தோற்று நடையை கட்டியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com