

ஆன்டல்யா,
உலக கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 1) துருக்கியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி பிரான்சுடன் மோதியது.
இந்த போட்டியில் அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான் மற்றும் அமன் சைனி அடங்கிய இந்திய ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதி போட்டியில் இந்திய அணி 59-60, 60-60, 60-58 என்ற கணக்கில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் பிரான்சை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.