

காகமிகஹரா,
18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான (சப்-ஜூனியர்) ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானில் உள்ள காகமிகஹரா நகரில் நடந்து வருகிறது.
ஆண்கள் பிரிவில் இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. தனது ஆதிக்கத்தை தொடர இந்திய அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் அதிர்ச்சி அளிக்க பாகிஸ்தான் அணி முயற்சி மேற்கொள்ளும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. முன்னதாக நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் ஜப்பான்-மலேசியா அணிகள் சந்திக்கின்றன.
பெண்கள் பிரிவில் இன்று நடைபெறும் அரையிறுதியில் இந்தியா-சீனா (அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதைத்தொடர்ந்து நடைபெறும் 2-வது அரையிறுதியில் ஜப்பான்- தென்கொரியா மோதுகின்றன.