ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணிகள் அரையிறுதிக்கு தகுதி

இந்திய அணி சிங்கப்பூரை துவம்சம் செய்து தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்றது.
 ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணிகள் அரையிறுதிக்கு தகுதி
Published on

சென்னை,

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான (சப்-ஜூனி யர்) ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானில் உள்ள காகமிகஹரா நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின.

ஆண்களுக்கான 'ஏ' பிரிவில் இடம் பிடித்த இந் திய அணி தனது 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் சீன தைபேயை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி கோல் மழை பொழிந்த இந்தியா 13-1 என்ற கோல் கணக்கில் சீன தைபேயை பந்தாடியது.

லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஜப்பான் முதலிடமும், இந்தியா 2-வது இடமும், 'பி' பிரிவில் பாகிஸ்தான் முதலிடமும், மலேசியா 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

இதன் பெண்களுக்கான 'ஏ' பிரிவில் அங்கம் வகித்த இந்திய அணி தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் 25-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை துவம்சம் செய்து தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்றது.

லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் இந்தியா முதலிடத்தையும், தென்கொரியா 2-வது இடத்தையும், 'பி' பிரிவில் ஜப்பான் முதலிடத்தையும், சீனா 2-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தன.

X

Daily Thanthi
www.dailythanthi.com