ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு இன்று 2 தங்கம்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு இன்று 2 தங்கம்
Published on

பாங்காக்,

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. 16-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 2-வது நாள் பந்தயங்கள் முடிவில் இந்தியா 3 தங்கம், 3 வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தில் இருந்தது. ஜப்பான் 7 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 3 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும் இருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான இன்று இந்தியா 2 தங்கம் வென்றுள்ளது. ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர்பால் சிங் 20.23 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றுள்ளார். அதேபோல் பெண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பரூல் சவுத்ரி தங்கம் வென்று அசத்தியுள்ளார். அவர் பந்தய தூரத்தை 9.38 நிமிடங்களில் கடந்தார்.

பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் ஷைலி சிங் 6.54 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com