ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்

இந்தியா சார்பில் 59 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
குமி,
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் நேற்று தொடங்கியது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா சார்பில் 59 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
மும்முறை தாண்டுதல் விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்த பிரவின் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 16.09 மீ. தூரம் தாண்டி பிரவின் சித்ரவேல் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
400 மீ. கலப்பு ஓட்டத்தில் இந்தியாவின் வெங்கடேசன் சந்தோஷ் விஷால் ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர் .
Related Tags :
Next Story






