

புதுடெல்லி,
அடுத்த ஆண்டுக்கான (2027) ஆசிய தொடர் ஓட்டப் போட்டி மற்றும் 2028-ம் ஆண்டுக்கான ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆகிய வற்றை நடத்த இந்திய தடகள சம்மேளனம் சார்பில் கடந்த ஆண்டு விண் ணப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஹாங்காங்கில் நேற்று நடந்த ஆசிய தடகள சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த இரு போட்டிகளையும் நடத்துவதற்கான உரிமத்தை இந்தியாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி 3-வது ஆசிய தொடர் ஓட்ட போட்டி அடுத்த ஆண்டு (2027) மே மாதம் சண்டிகாரில் நடக்கிறது. இதில் இருபாலருக்கும் 100, 400 மீட்டர் ' தொடர் ஓட்டம், கலப்பு அணிகள் பிரிவில் 100, 400 மீட்டர் தொடர் ஓட்டம் என 6 பந்தயங்கள் நடைபெறும். ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் 2028-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடக்கிறது.