ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்று இந்திய வீரர் குல்வீர் சிங் சாதனை

image courtesy:PTI
இந்த தொடரில் இந்திய அணி சார்பில் 59 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
குமி,
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் நேற்று தொடங்கியது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா சார்பில் 59 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் முதல் நாளான நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் தங்கப்பதக்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 28 நிமிடம் 38.63 வினாடியில் கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ஜப்பான் வீரர் மெபுகி சுசுகி வெள்ளிப்பதக்கமும், பக்ரைன் வீரர் அல்பெர்ட் கிபிசி ரோப் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
இதன் மூலம் நடப்பு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை குல்வீர் சிங் படைத்துள்ளார்.
Related Tags :
Next Story






