ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற இந்திய மகளிர் அணி


ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற இந்திய மகளிர் அணி
x

வெற்றி பெற்ற இந்திய அணியில் தமிழக வீராங்கனை அபிநயா இடம்பெற்றுள்ளார்.

குமி,

26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள குமி நகரில் நடந்து வருகிறது. இதில் 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் 5-வது நாளான இன்று நடைபெற்ற மகளிருக்கான 4*100மீ தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியது. வெற்றி பெற்ற இந்திய அணியில் தமிழக வீராங்கனை அபிநயா இடம்பெற்றுள்ளார்.

மேலும் இன்று நடைபெற்ற மகளிருக்கான 800மீ ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா வெண்கலப்பதக்கம் வென்றார்.

1 More update

Next Story