ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்

லக்‌சயா சென் தனது முதல் சுற்றில் சீன தைபேயின் லீ சியா ஹாவை சந்திக்கிறார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

நிங்போ,

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள நிங்போ நகரில் இன்று முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் ரூ.4 கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் பிரனாய், லக்சயா சென், கிரண் ஜார்ஜ், பிரியான்ஷூ ரஜாவத் ஆகியோர் பங்கேற்கிறார்கள். உலக தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் லக்சயா சென் தனது முதல் சுற்றில் சீன தைபேயின் லீ சியா ஹாவை சந்திக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற பி.வி.சிந்து, மாள்விகா பான்சோத், அனுபமா உபாத்யாயா, ஆகார்ஷி காஷ்யப் உள்ளிட்ட இந்தியர்கள் களம் இறங்குகிறார்கள். சிந்து தனது முதல் சவாலை இந்தோனேசியாவின் எஸ்தெர் நுருமியுடன் தொடங்குகிறார்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி - காயத்ரி, ஸ்ருதி மிஸ்ரா - பிரியா ஜோடியும், ஆண்கள் இரட்டையரில் ஹரிகரன் அம்சகருணன் - ரூபன் குமார், பிருத்வி கிருஷ்ணமூர்த்தி ராய் - சாய் பிரதீக் இணையும், கலப்பு இரட்டையரில் ரோஹன் கபூர்-ருத்விகா ஷிவானி, சதீஷ் கருணாகரன் - ஆத்யா வரியாத், துருவ் கபிலா - தனிஷா கிரஸ்டோ, ஆஷித் சூர்யா-அம்ருதா பிரமுதேஷ் கூட்டணியும் களம் காணுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com