ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் பி.வி. சிந்து வெற்றி; லக்சயா சென் தோல்வி

கோப்புப்படம்
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பி.வி.சிந்து, இந்தோனேசிய வீராங்கனை எஸ்தெர் நுருமியை வீழ்த்தினார்.
நிங்போ,
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில், நேற்று நடைபெற்ற முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, இந்தோனேசிய வீராங்கனை வின் எஸ்தெர் நுருமியுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-15, 21-19 என்ற நேர்செட்டில் எஸ்தெர் நுருமியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், சீன தைபே வீரர் சியா ஹாவ் லீயுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 18-21, 10-21 என்ற நேர்செட்டில் சியா ஹாவ் லீயிடம் தோல்வியடைந்தார். மற்றொரு இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 16-21, 21-12, 11-21 என்ற செட் கணக்கில் சீனாவின் சூ குயாங் லூவிடம் தோல்வியடைந்தார்.






