ஆசிய குத்துச்சண்டை: இந்திய வீரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்திய வீரர் ஆதித்யா (65 கிலோ) தோல்வி கண்டு வெளியேறினார்.
ஆசிய குத்துச்சண்டை: இந்திய வீரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

உலான்பத்தார்,

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் காலிஇறுதியில் இந்திய வீரரான சென்னையை சேர்ந்த விஸ்வநாத் சுரேஷ் 5-0 என்ற கணக்கில் உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான சஞ்சார் தாஷ்கென்பாவை (கஜகஸ்தானை) வீழ்த்தி அரையிiiறுதிக்கு முன் னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.

90 கிலோ வுக்கு மேற்பட்ட எடைப்பிரிவில் இந்திய வீரர் நரேந்தர் அரைஇறுதியை எட்டினார். மற்றொரு இந்திய வீரர் ஆதித்யா (65 கிலோ) தோல்வி கண்டு வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com