ஆசிய கோப்பை வில்வித்தை: தங்கம் வென்ற இந்திய வீரர்

இந்திய வீரர் உதய் கம்போஜ் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
ஆசிய கோப்பை வில்வித்தை: தங்கம் வென்ற இந்திய வீரர்
Published on

சென்னை,

பாங்காக்கில் நடந்த ஆசிய கோப்பை மற்றும் உலக ரேங்கிங் வில்வித்தை போட்டியில் கடைசி நாளான நேற்று ஆண்களுக்கான காம்பவுண்ட் தனிந பர் இறுதி சுற்றில் இந்திய வீரர் உதய் கம்போஜ் 145-144 என்ற புள்ளி கணக்கில் சக நாட்டு வீரர் பிரதமேஷ் ஜவ்கரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

தோல்வி கண்ட ஜவ்கர் வெள்ளிப்பதக்கமும், மற்றொரு இந்திய வீரர் ரஜத் சவுகான் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இந்த போட் டியில் இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கம் வென்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com